அமரன் - 2 படத்தில் நடிக்கும் கார்த்திக்.?!

Bookmark and Share

அமரன் - 2 படத்தில் நடிக்கும் கார்த்திக்.?!

நவரச நாயகன் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று - அமரன். கார்த்திக் நடிப்பில் 1992- ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற அமரன் படத்தை, கே. ராஜேஷ்வர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கார்த்திக் தாதா கேரக்டரில் நடித்திருந்தார்.  அத்துடன் இப்படத்திற்காக கார்த்திக் முதன்முறையாக சொந்தக்குரலில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலைப் பாடினார்.

கார்த்திக் பாடிய இந்தப் பாடல் அப்போது சூப்பர் ஹிட்டானது!  அமரன் படத்துக்கு ஆதித்யன் இசையமைப்பாளராக இருந்தாலும் வெத்தல போட்ட சோக்குல பாடலுக்கு விஸ்வகுரு என்ற இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கார்த்திக்.  அவர் நடித்த வில்லன் கேரக்டர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றிருப்பது.

எனவே நெகட்டிவ்ஷேடில் இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கார்த்திக்! அதன்படி ஏற்கனவே தாதா கேரக்டரில் அவர் நடித்த அமரன் படத்தின் தொடர்ச்சியாக அமரன்-2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ள கார்த்திக், இது சம்பந்தமாக அமரன் படத்தை இயக்கிய கே.ராஜேஷ்வரை அழைத்து பேசி இருக்கிறார்.

விரைவில் இப்படம் சம்பந்தமான அறிவிப்பு வரும் என்று தகவல்! அமரன் படத்துக்கு முன் கே.ராஜேஷ்வர் இயக்கிய இதயத்தாமரை என்ற படத்திலும் கார்த்திக்தான் ஹீரோவாக நடித்திருந்தார்.


Post your comment





Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions