போலீஸ் கமிஷனரை சந்தித்தார் அம்பிகா

Bookmark and Share

போலீஸ் கமிஷனரை சந்தித்தார் அம்பிகா

பிரபல நடிகை அம்பிகா நேற்று (ஏப் 17) திடீரென கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார். சென்னை வெப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள்  புகார் அளிக்கலாம்.

முக்கிய பிரமுகர்கள் கமிஷனரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று நடிகை அம்பிகா திடீரென கமிஷனர் அலுவலகம் வந்தார்.

இதுகுறித்து முன்பே தகவல் தெரிந்த போலீசார் அவரை கமிஷனர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் 20 நிமிடங்கள் கமிஷனரை சந்தித்துவிட்டு திரும்பினார். முன்வாயில் வழியாக வந்தவர்.

செய்தியாளர்களை தவிர்ப்பதற்காக பின்வாயில் வழியாக திரும்பிச் சென்றார் அம்பிகா வந்ததற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

சென்னை வளசரவாகத்தில் அம்பிகா, ராதாவுக்கு சொந்தமான ஏஆர்எஸ் கார்டனில் சில சொத்து பிரச்சினைகள் இருப்பதாகவும், இதுகுறித்து கமிஷரிடம் அவர் ஆலோசனை பெற்றுச் சென்றிருக்கலாம். அல்லது புகார் அளித்திருக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!
வாரிசுகளை களம் இறக்கும் அம்பிகா!
விஜய் படத்தில் நடிக்கும் அம்பிகா, ராதிகா
மலையாள படவிழா: மம்முட்டி, மோகன்லால் அம்பிகா, ராதா பங்கேற்பு.
ஐகோர்ட்டில் சமரச உடன்பாடு: தனுஷ் பட தலைப்பு சிக்கல் தீர்ந்தது.
நடிகர் தனுஷ போல் மாப்பிள்ளை வேண்டும் - நடிகை சோனம் கபூர் பகிரங்க அறிவிப்பு!
தனுஷூன் அம்பிகாபதி ஜூன் 21ல் ரிலீஸ்!
சகோதரி நடிகைகள் ராதா - அம்பிகா இடையே சொத்து தகராறு? கார்த்திகா பதில்!!
அவன்-இவன்’ படம் எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது:அம்பிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions