வாரிசுகளை களம் இறக்கும் அம்பிகா!

Bookmark and Share

வாரிசுகளை களம் இறக்கும் அம்பிகா!

1980-90 களில் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து அசத்தியவர் நடிகை அம்பிகா. மலையாளத்து வரவான இவர், தமிழில், பாக்யராஜின், 'அந்த 7 நாட்கள்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் அசத்தினார்.

ஒருக்கட்டத்தில் நடிப்பிலிருந்து விலகிய அம்பிகா, அதன்பின் இயக்குநராகவும், குணச்சித்திர நடிகையாகவும் மாறினார். இப்போதும் படங்களில் நடித்து வரும் அம்பிகா, அடுத்தப்படியாக தனது வாரிசுகளையும் சினிமாவில் களம் இறக்க இருக்கிறார்.

அம்பிகாவுக்கு இரண்டு ஆண் வாரிசு. ஒருவர் மூத்தவர் ராம்கேசவ்(வயது 20) மற்றொருவர் இளையவர் ரிஷிகேஷ்(வயது 18). இருவரும் அமெரிக்காவில் படித்து வருகிறார்கள்.

பள்ளியில் படிக்கும்போதே நாடகம் போன்றவற்றில் அசத்தியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாது இசை, விளையாட்டு போன்றவற்றிலும் அதிகம் ஆர்வம் உடையவர் ராம்கேசவ். 5 வருடம் முறைப்படி இசையும் பயின்றுள்ளார்.

குறிப்பாக வயலின் மற்றும் பியானோ நன்கு வாசிக்க கூடியவர். மலையாளம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளும் சரளமாக பேசக்கூடியவர். அண்ணனை போலவே ரிஷிகேஷூம் நடிப்பில் ஆர்வம் உடையவர்.

அமெரிக்காவில் சைக்காலஜி படித்து வருகிறார். இவரும் 5 வருடம் முறைப்படி இசை பயின்றுள்ளார். நடிப்பு, இசை, விளையாட்டிலும் கெட்டிக்காரர் ரிஷிகேஷ். சின்னவயதில் பள்ளியில் படிக்கும் நிறைய நாடகத்தில் நடித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் இப்போதும் தொடர்கிறது. அம்மா அம்பிகாவை போல அண்ணன்-தம்பி இருவருக்கும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதனால், அமெரிக்காவில் கல்லூரியில் படிக்கும்போது படிப்பை தவிர்த்து சினிமாவில் நடிப்பதற்கு தேவையான நடிப்பு, நடனம் உள்ளிட்டவைகளில் முறைப்படி பயிற்சி எடுத்து வருகின்றனர்.

செப்டம்பர் மாதம் இருவரும் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகின்றனர். இந்தியா திரும்பியதும் தனது மகன்கள் இருவரையும் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் அம்பிகா.

தொடர்ந்து நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் மகன்களை சினிமாவில் களமிறக்க இருக்கிறார். அம்பிகாவின் சகோதரியான நடிகை ராதா தனது மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை சினி்மாவில் களம் இறக்கியுள்ள நிலையில், இப்போது அம்பிகாவும் தனது மகன்களை சினிமாவில் களம் இறக்க இருக்கிறார்.


Post your comment





Related News
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!
போலீஸ் கமிஷனரை சந்தித்தார் அம்பிகா
விஜய் படத்தில் நடிக்கும் அம்பிகா, ராதிகா
மலையாள படவிழா: மம்முட்டி, மோகன்லால் அம்பிகா, ராதா பங்கேற்பு.
ஐகோர்ட்டில் சமரச உடன்பாடு: தனுஷ் பட தலைப்பு சிக்கல் தீர்ந்தது.
நடிகர் தனுஷ போல் மாப்பிள்ளை வேண்டும் - நடிகை சோனம் கபூர் பகிரங்க அறிவிப்பு!
தனுஷூன் அம்பிகாபதி ஜூன் 21ல் ரிலீஸ்!
சகோதரி நடிகைகள் ராதா - அம்பிகா இடையே சொத்து தகராறு? கார்த்திகா பதில்!!
அவன்-இவன்’ படம் எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது:அம்பிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions