எங்கே போனார் இயக்குநர் அமீர்?

Bookmark and Share

எங்கே போனார் இயக்குநர் அமீர்?

பருத்திவீரன் படத்துக்குப் பிறகு பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் அமீர்.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஊடகங்களின் மத்தியில் அமீருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பல்வேறு விஷயங்களில் துணிச்சலாகவும் தைரியமாகவும் கருத்துக்களை முன் வைப்பார்.

மேடையில் பேசும்போது சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசி பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.பின்னாட்களில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சே அவருக்கு எதிராகவும் திரும்பியது. இதற்கிடையில் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவராகவும், ஃபெப்சி தலைவராகவும் இருந்தார் அமீர்.

இந்த பதவிகளில் இருந்தபோது தினமும் ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்வார் அமீர். அங்கே அவர் பேசுவது பத்திரிகைகளில் செய்தியாகும். இப்படி பரபரப்பாக இயங்கிய அமீர், ஃபெப்சி தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஊடகவெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்.

ஆமாம்.... என்ன செய்கிறார் அமீர்?  ஜே.கே.ரித்தீஷ் உடன் எந்நேரமும் காணப்படும் ஆதம்பாவா என்பவர் இயக்கும் பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது தவிர இன்னொரு படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். 

 


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions