பெண்கள், கர்ப்பிணிகளை தாக்கியது ஏன்? போலீசாருக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி

Bookmark and Share

பெண்கள், கர்ப்பிணிகளை தாக்கியது ஏன்? போலீசாருக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதனா தமிழக காவல்துறையின் தடியடிக்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள், கர்ப்பிணிகளை போலீசார் தாக்கியது ஏன் என்றும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது காவல்துறை நேற்று திடீர் தடியடி நடத்தியது.

இதனால் பயந்து ஓடிய அவர்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி தாக்கினர். பெண்கள் முதியவர்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

காவல்துறையின் இந்த தாக்குதல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சென்னை உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது "ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராளிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.போராட்டத்தில் தேச விரோத சக்திகள் இருந்திருந்தால் அவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

எதற்கு தடியடி நடத்தினார்கள்?பெண்கள், கர்ப்பிணிகளை போலீசார் தாக்கியது ஏன்?ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று மாலையுடன் முடிந்து விட்டது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்". இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.

காவல்துறையின் தடியடி நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions