கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்

Bookmark and Share

கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்

இன்று நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் மிகவிரைவில் வெளிவரவிருக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

இவ்விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் முக்கியாக இயக்குனர் அமீர் பேசுகையில் "என்னுடைய முதல் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.

அது என்னவென்றால், இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமல் இவர்கள் மூன்று பேரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால், அதை நான் நிராகரித்து விட்டேன். இவர்கள் மூவருமே ஜாம்பவான்கள். இவர்களைக் கையாள்வது கடினமும் கூட.

ஆனாலும் இவர்களுடன் இணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறும் என்று நம்புகிறேன். பருத்தி வீரன் படத்துக்காக 'அறியாத வயசு...' பாடலை இளையராஜா பாடிக் கொடுத்தார்.

அதில் ஒரு திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. ராஜா சாரிடம் அதைச் சொல்ல நான் பயந்தேன். பின்னர் தயக்கத்துடன் சொன்னேன். அவரும் செய்து கொடுத்தார்," என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions