இயக்குநர் அமீர் உடன் இணைந்து நடிக்கும் ஆரி!

Bookmark and Share

இயக்குநர் அமீர் உடன் இணைந்து நடிக்கும் ஆரி!

2005 ஆம் ஆண்டு ஆடும்கூத்து படம் மூலம் நடிகரான ஆரி, அதன்பின் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் இணைந்து நடித்த ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் நடித்தார். 

கடந்த ஆண்டு நயன் தாராவுக்கு ஜோடியாக மாயா படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன்பின் திருமணம் நடந்தது. கைவசம் ஒரிரு படங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து இப்போது ஒரு பெரியபடம் அவருக்கு அமைந்திருக்கிறதாம்.

அந்தப்படத்தில் இரண்டுநாயகர்கள். ஒரு நாயகனாக ஆரி நடிக்க,  அந்தப்படத்தில் இன்னொரு நாயகராக இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறாராம். 

படத்தை முகவரி, தொட்டிஜெயா, 2013 இல் வெளியான 6 உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் தொடர்பான பேச்சுவார்தைகள் வேகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள். 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions