அமீர்கானுக்கு படப்பிடிப்பின்போது தோள்பட்டையில் காயம்

Bookmark and Share

அமீர்கானுக்கு படப்பிடிப்பின்போது தோள்பட்டையில் காயம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அமீர்கான் ‘தங்கல்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பின் போது அமீர்கான் குத்துச்சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது தோள்பட்டையில் திடீரென காயம் ஏற்பட்டது. 

இதனால், அமீர்கான் வலியால் துடித்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேற்கொண்டு சிரமம் எடுக்கக்கூடாது என்றும், ஒரு வார காலம் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, அமீர்கான் மும்பை அழைத்து வரப்பட்டார். அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதுபற்றி அமீர்கான் தன்னுடைய ‘டுவிட்டர்’ வலைதள பக்கத்தில், ‘‘இது ஒன்றும் பெரிய அளவிலான காயம் அல்ல. ஒரு வார ஓய்வுக்கு பின்னர், படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions