இனி இந்தியாவின் விளம்பர தூதராக நடிகர் அமீர் கான் இருக்க மாட்டார்?

Bookmark and Share

இனி இந்தியாவின் விளம்பர தூதராக நடிகர் அமீர் கான் இருக்க மாட்டார்?

இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் கையாளப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் செயல்பட்டுவந்தார். 

இந்த நிலையில், தூதர் பொறுப்பில் இருந்து அமீர் கான் நீக்கப்பட்டதாக நேற்று காலை மும்பை ஊடகங்களில் செய்தி வெளியானது. இத்தகவலை மத்திய சுற்றுலா அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது. 

ஆனால் மத்திய சுற்றுலா மந்திரி மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ” வியக்கத்தக்க இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

எனவே விளம்பர தூதராக செயல்பட்டுவந்த அமீர் கான் ஒப்பந்தமும் முடிவு வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதால் நாம் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என எனது மனைவி என்னிடம் கேட்டார் என்று அமீர் கான் கூறியிருந்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.   

இதனையடுத்து, நான் கூறிய கருத்துகளில் உறுதியா இருக்கிறேன். அதேவேளையில், நான் இந்தியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் அமீர் கான் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions