43-வது திருமணநாளை கொண்டாடி மகிழ்ந்த அமிதாப்பச்சன்!

Bookmark and Share

43-வது திருமணநாளை கொண்டாடி மகிழ்ந்த அமிதாப்பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் தம்பதியர் இன்று தங்களது 43-வது திருமணநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்திப் படவுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த வேளையில் ‘ஜன்ஜீர்’ (தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த சிரித்து வாழ வேண்டும்) படத்தில் நடித்தபோது அமிதாப் பச்சனுக்கும் அதே படத்தில் அவரது ஜோடியாக நடித்த ஜெயா பாதுரிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 3-6-1973 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த தம்பதியருக்கு திருமணமாகி இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பாக, தனது டுவிட்டர் அபிமானிகளுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அமிதாப் பச்சன், ‘எனக்கும் ஜெயாவுக்கும் இடையில் மேலும் ஒரு ஆண்டு கடந்துப்போய் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான வேளையில் அவர் மும்பையில் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதை சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ள அமிதாப் பச்சன் இருவரும் சேர்ந்திருக்கும் சில பிரத்யேக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், தங்களது திருமணநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions