மீண்டும் வில்லனாகும் அமிதாப் பச்சன்!

Bookmark and Share

மீண்டும் வில்லனாகும் அமிதாப் பச்சன்!

இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்காத வேடங்களே இல்லை. இந்த வயதிலும் விதவிதமான பாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். இவருடைய நடிப்பில் 2002-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘ஆங்கென்’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது மீண்டும் வில்லனாக அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார். ‘ஆங்கேன்–2’ படத்தை கவுரங் தோஷி தயாரிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். இதில் அமிதாப் பச்சன் முழு வில்லனாக நடிக்கிறார். 

முந்தைய பாகத்தில் நடித்த அக்ஷய்குமாருக்கு பதிலாக இப்படத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கவிருக்கிறார். மேலும், முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அமிதாப்பச்சன், சமீபத்தில், “இளம் ஹரோக்களுக்கு வில்லனாக நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் மகனுக்கேகூட வில்லனாக நான் நடிக்கலாம்” என்று கூறி இருந்தார். இப்போது அதை செய்து காட்ட இருக்கிறார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions