என் நடிப்பில் குறை இருக்கிறது- அமிதாப்பச்சன்!

Bookmark and Share

என் நடிப்பில் குறை இருக்கிறது- அமிதாப்பச்சன்!

சமீபத்தில் தனது 75–வது பிறந்தநாளை கொண்டாடினார் பாலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். இந்த விழாவில் பேசியவர்கள் அமிதாப்பச்சனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். 

இதற்கு அமிதாப்பச்சன், “எனது வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது, அதை நான் ஏற்க மாட்டேன். என்னிடம் பல குறைகள் இருக்கின்றன. என் நடிப்பிலும் குறை இருக்கிறது. என்னிடம் உள்ள குறைகளை எப்படி சரிசெய்யலாம் என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். 

என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று பாராட்டுகிறார்கள். ஆனால் என்னைவிட திறமையானவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி பெருமைப்பட எதுவும் இல்லை. நடிப்பில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் அனைவரும் திறமைசாலிகள்.

அவர்கள் திரை உலகில் 100 வருடம் நிலைத்திருக்க வேண்டும். என் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்பது சரியல்ல. அதை சினிமாவாக தயாரித்தால் படம் ஓடாது. 'பிளாப்' ஆகி விடும். 

எனக்கு இசை கற்க வேண்டும். பாடல்பாட வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதை செய்ய முடியவில்லை. எனது அப்பாவின் பணிகளை இப்போது தான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றிய 'டாக்குமெண்டரி' படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் சாதாரணமானவன்" என்றார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions