கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்

Bookmark and Share

கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்

கொல்கத்தாவில் கடந்த 10-ந் தேதி, சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மேற்கு வங்காள அரசின் அழைப்பின் பேரில், அதில் இந்திப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார். மறுநாள், அவர் மும்பை திரும்புவதற்காக,மாநில அரசின் ஏற்பாட்டில் ஒரு டிராவல்ஸ் நிறுவன காரில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நடுவழியில், அந்த காரின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியது. நல்லவேளையாக அமிதாப் பச்சன் காயமின்றி உயிர் தப்பினார். பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மூத்த மந்திரியின் காரில் ஏறி அவர் விமான நிலையத்துக்கு சென்றார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம் மேற்கு வங்காள அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில், காரின் தகுதி சான்றிதழ் காலாவதி ஆனது தெரியவந்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை நடிகர் அமிதாப் பச்சன் இன்று மறுத்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், நான் விபத்தில் சிக்கியதாக ஊடகங்கள் மற்றும் எனது நல விரும்பிகள் மூலமாகதான் எனக்கு தெரியவந்தது. அது தவறான தகவல். அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions