ஜனாதிபதியுடன் பிக்கு படத்தைப் பார்த்த அமிதாப்

Bookmark and Share

ஜனாதிபதியுடன் பிக்கு படத்தைப் பார்த்த அமிதாப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் அற்புதமான நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிக்கு’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அந்த படத்தை நேற்று ஜனாதிபதி மாளிகையில் அமிதாப் பச்சன் திரையிட்டார். 

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த இந்த திரையிடலில் கலந்து கொண்ட அமிதாப், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் சேர்ந்து இந்த படத்தைப் பார்த்தார். படத்தின் இயக்குனர் ஷூஜித் சிர்காரும் இந்த திரையிடலில் கலந்து கொண்டார். இந்த படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இர்பான் கான் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்ததால் இந்த திரையிடலில் கலந்து கொள்ளவில்லை. 

இந்த திரையிடல் குறித்து நேற்று தனது வலைத்தளத்தில் பதிவிட்ட அமிதாப், மரியாதைக்குரிய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு எனது ‘பிக்கு’ படத்தைப் பார்த்தார். அவர் இந்த படத்தை மிகவும் ரசித்தார் என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

குறிப்பாக படத்தில் நான் பேசும் பெங்காலி-இந்தி உச்சரிப்பை அவர் வெகுவாக பாராட்டினார். திரைப்படம் முடிந்ததும் என்னை அவர் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

உணவு மேஜையிலும் கூட நாங்கள் படத்தைப் பற்றியே விவாதித்தோம். இது எனக்கு மீண்டும் ஒருமுறை கிடைக்க முடியாத கவுரவம். மேதகு இந்திய ஜனாதிபதியின் கருணை நிறைந்த உள்ளத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions