பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப்பச்சன்!

Bookmark and Share

பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப்பச்சன்!

எல்லா தாத்தாக்களையும் போலவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தனது பேத்தி மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக்பச்சன் தம்பதியரின் மகளும் அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆரத்யாவின் 4–வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாட ஏற்பாடு நடந்தது. அப்போது அமிதாப்பச்சன் அவரது பேத்தியிடம், ‘‘உனது பிறந்த நாளில் உனக்கு ஏராளமான பரிசுகள் வரும்’’ என்று விளையாட்டாகச் சொன்னார்.

உடனே அவரது பேத்தி ஆரத்யா, ‘‘தாத்தா நமக்கு பரிசு தருபவர்களுக்கு நாமும் பரிசு கொடுக்க வேண்டாமா?’’ என்று பிஞ்சுக் குரலில் கேட்க அமிதாப் அசந்து போய் விட்டார்.

பேத்தியின் கேள்வியால் நெகிழ்ந்து போன அமிதாப்பச்சன் தனது வீட்டின் அருகே உள்ள குழந்தைகளை தனது பேத்தியின் பிறந்த நாளையொட்டி அழைத்து அனைவருக்கும் பேத்தியுடன் சேர்த்து பரிசு கொடுத்து மகிழ்ந்தார்.

பேத்தியின் மீது அவர் கொண்ட பாசத்தால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் வந்தது. அதற்கு குட்டி தேவதையின் வார்த்தை காரணமாக அமைந்து விட்டது.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions