மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது: அமிதாப் விளக்கம்

Bookmark and Share

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது: அமிதாப் விளக்கம்

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். 

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யும் படி பீகார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விளம்பரத்தில் நடித்தது பற்றி தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றுவதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இதுவரை எந்தவித நோட்டீசும் வரவில்லை.

அப்படி வரும் பட்சத்தில் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், உரிய ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions