“செத்த வீட்டுலேயுமா செல்பி எடுப்பீங்க..?” - கொதிக்கும் அமிதாப்!

Bookmark and Share

“செத்த வீட்டுலேயுமா செல்பி எடுப்பீங்க..?” - கொதிக்கும் அமிதாப்!

இன்றைக்கு செல்பி மோகம் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை பிடித்து ஆட்டுகிறது. கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட, கோவில் பிரகாரத்தில் நின்றவாறு ஒரு செல்பி, முடிந்தால் கடவுள் சிலையுடன் சேர்த்து ஒரு செல்பி எடுத்து அதனை உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களில் போட்டு லைக்குகளை அள்ளவேண்டும். இதுதான் செல்பி மோகம் கொண்டவர்களின் எண்ணம். சந்தோஷ நிகழ்வுகளில் சரி.. ஆனால் சாவு வீட்டிலுமா செல்பி எடுக்க வேண்டும் என கொதித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.

சமீபத்தில் தனது நண்பரின் மறைவுக்காக அஞ்சலி செலுத்தவும், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும் டில்லி சென்றிருந்தார் அமிதாப். ஆனால் நண்பரின் இறுதி ஊர்வலத்தின் போது பலர் செல்பி எடுத்து அதை நண்பர்களுடன் ஷேர் பண்ணிக்கொண்ட செயலை பார்த்து தனது வேதனை அடைந்த அமிதாப், தனது சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“நல்ல நண்பன்.. பேசிக்கிட்டே இருந்தான்.. திடீர்னு போயிட்டான்.. ஆனால் அவனுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பல பேர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்படியென்றால் அவன் சாவுக்கு என்ன மரியாதை..?

இவர்கள் இறந்தவர்களையும் மதிக்கவில்லை. அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களையும் மதிக்கவில்லை.. என்ன மனிதர்கள்..?”“ என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அமிதாப்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions