மார்கரிதா திரைப்படத்திற்கு அமிதாப் பச்சன் புகழாரம்

Bookmark and Share

மார்கரிதா திரைப்படத்திற்கு அமிதாப் பச்சன் புகழாரம்

பாலிவுட்டில் இப்போது ஹாட் டாபிக்காக இருப்பது ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’ படம். தனது ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தால் பலரைக் கண்கலங்க வைத்த அமீர் கானே இந்தப் படத்தைப் பார்த்து கதறி அழுத நிலையில், தற்போது பாலிவுட்டின் தாதா அமிதாப் பச்சன், இந்தப் படத்தை புகழ்ந்திருப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, சிறந்த நடிகை உட்பட பல விருதுகளை குவித்துள்ள இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்தால், மனம் அன்பு நிறைந்து வலியால் மவுனமாக அழுகிறது. உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி அப்பட்டமாக சித்தரித்துள்ள படம் தான் ‘மார்கரிதா’. இதில் அந்த இளம் பெண்ணாக நடித்துள்ள ‘கல்கி கொச்லின்’ சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார். அவரது தாயாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தனது மனைவி மூலமாக இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அமீர் கான், இந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தில் நேற்று டெல்லியில் சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனர் ஷோனாலி, நடிகை ரேவதி, ரசனை இயக்குனர் அனுராக் காஷ்யப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தைப் பார்த்த அமீர்கான் நீண்ட நேரம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார், இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் 72 வயதான அமிதாப் பச்சன் ட்விட்டரில் “உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள உண்மையான, துணிச்சலான படம்..” என்று ட்வீட் செய்து இயக்குனர் ஷோனாலி போசை பாராட்டியுள்ளார்.

அமீர் கானைத் தொடர்ந்து தற்போது ஹ்ருத்திக் ரோஷனும் தனது நண்பர்களுடன் இணைந்து படத்தைப் பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளார். இந்த சிறப்பு காட்சியை பார்க்க இயக்குனர் கரண் ஜோகர், ரன்பீர் கபூர் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே காத்திருக்கிறது.
ரசிகர்கள் இந்தப் படத்தை தியேட்டரில் காண வருகிற 17-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions