தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியது பற்றி அமிதாப்பச்சன் உருக்கம்

Bookmark and Share

தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியது பற்றி அமிதாப்பச்சன் உருக்கம்

சமராட்டிய அரசு சார்பில் ‘மேக் இன் இந்தியா’ வார விழா மும்பையில் நடந்து வருகிறது. இதையொட்டி, மும்பை கிர்காவ் கடற்கரையில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்த மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான் அதே மேடையில் அமிதாப் பச்சன் மற்றும் பா.ஜனதா எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

தீ விபத்து குறித்து நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைத்தள பக்கத்தில் ‘‘மேடையில் எனது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அங்கேயே இருந்து முதல்-மந்திரியை சந்திக்குமாறு என்னை சிலர் கூறினர். அவர்கள் பேச்சை கேட்டு அங்கேயே இருந்திருந்தால், தீயில் சிக்கி இருப்பேன்.

தெய்வாதீனமாக, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் பயமுறுத்திவிட்டது’’ என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions