அமிதாப் பச்சனை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்தது

Bookmark and Share

அமிதாப் பச்சனை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்தது

உலகில் உள்ள அனைத்து துறை பிரபலங்களுக்கும், சராசரி நபர்களுக்கும் அன்றாடம் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் இரண்டு வரி எழுதாவிட்டால் எதையோ இழந்துவிட்டதைப் போன்றதொரு வெறுமை உணர்வு அவர்களை ஆக்கிரமித்து விடும்.

காதல்வயப்படுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது நிலைபாட்டினை உலகுக்கு தெரிவிக்கும் சாளரமாக விளங்கிவரும் இவ்வகை சமூக வலைத்தளங்களை அரசியல் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் ஒரு பிரசார சாதனமாகவே கருதி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை பிரபல சமூக வலைத்தளமான 'பேஸ்புக்'கில் பின்தொடர்பவர்களின் (followers) எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 'பேஸ்புக்'கில் தனது "ஃபாலோயர்ஸ்" எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்தை கடந்து விட்டதாக 72 வயது அமிதாப் பச்சன் இன்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி இவரை பின் தொடர்ந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக மட்டும் இருந்த நிலையில் மூன்றே மாதங்களில் 10 லட்சம் புதிய அபிமானிகளை அமிதாப் பச்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் விரைவில் இந்த எண்ணிக்கை 3 கோடியாக உயர வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மற்றொரு சமூக வலைத்தளமான 'டுவிட்டர்' மூலம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டையும், கருத்துகளையும் தெரிவித்துவரும் அமிதாப்புக்கு டுவிட்டரில் சுமார் ஒன்றரை கோடி அபிமானிகள் உள்ளனர். 


Post your comment

Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions