மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்

Bookmark and Share

மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

இவரது இந்த சவாலை விராட் கோலி, அனுஷ்கா சர்மா, சாய்னா நேவால் ஆகியோர் ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட துவங்கியுள்ளனர். மேலும், அவர்களின் வீடியோக்களை வெளியிட்டு அதனை டேக் செய்வதன் மூலம் டேக் செய்யப்படுபவர்களுக்கும் சவால் விடுக்கப்படுகிறது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை மந்திரியின் இந்த புதிய சவாலை இந்தி திரை உலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும், சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து சூரியனை காண வேண்டும் போன்ற வாசகங்களை பதிவிட்டு சவாலை சந்திக்க உள்ளார் அமிதாப் பச்சன்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions