சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக வழக்கு: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்

Bookmark and Share

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக வழக்கு: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமிதாப்பச்சனுக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மன், அவரது ஆலிவுட் மேனேஜரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 1984-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷம் எழுப்பி, இக்கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஐகோர்ட்டில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கில், அமிதாப்பச்சனுக்கு கோர்ட்டு சம்மன் பிறப்பித்தது.

அந்த சம்மன், அமிதாப்பச்சனின் ஆலிவுட் மேனேஜர் டேவிட் ஏ.உங்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சிவில் நடைமுறை விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும்.

எனவே, மார்ச் 17-ந் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க தவறினால், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக்கோரி கோர்ட்டை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னும் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டை அமிதாப்பச்சன் ஏற்கனவே மறுத்துள்ளார். 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions