ஒரே குடும்பத்துக்கு 6 பத்ம விருதுகள்: அமிதாப் பச்சன் பெருமிதம்

Bookmark and Share

ஒரே குடும்பத்துக்கு 6 பத்ம விருதுகள்: அமிதாப் பச்சன் பெருமிதம்

இந்தியாவின் மிகப்பெரிய கலைக்குடும்பம் என அறியப்படும் பச்சன் குடும்பத்துக்கு ஆறு பத்ம விருதுகள் கிடைத்திருப்பது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்(72) பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ‘பிளாக்’கில் பெருமைப்பட குறிப்பிட்டுள்ள அமிதாப், தனது தந்தைக்கு முதன்முதலாக அளிக்கப்பட்ட பத்ம பூஷன் விருது, பின்னர், தனக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ, அடுத்து, பத்ம பூஷன், பின்னர் தனது மனைவி ஜெயாவுக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ, மருமகள் ஐஷ்வர்யாவுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ, மற்றும் தனக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விபூஷன் என மொத்தம் ஆறு பத்ம விருதுகளை பெற்ற ஒரே குடும்பம் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதற்காகவும், மூன்று பத்ம விருதுகளை பெற்ற தனிநபர் என்ற முறையிலும் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பெருமதிப்பிற்குரிய விருதான பத்ம விபூஷன் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து அமிதாப் பச்சன் பெற்றுக்கொள்கிறார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions