இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்: அமிதாப்பச்சன் நடிக்கிறார்

Bookmark and Share

இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்: அமிதாப்பச்சன் நடிக்கிறார்

இசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். என்றாலும், நேற்று மாலை வீடு திரும்பினார்.

வீட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றார். அங்கு ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினார்.

பாடலே இல்லாமல் உருவாகும் இந்த படத்தில் பின்னணி இசையே பிரதானம். எனவே அவர் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தனர். இது தவிர ‘ஒரு மெல்லிய கோடு’ படத்துக்கும் இளையராஜா இசையமைத்து வருகிறார். 100–வது நாள் படத்துக்குப் பிறகு இளையராஜா இசை அமைக்கும் முக்கியமான ‘திரில்லர்’ படம் இது என்று கூறப்படுகிறது.

மேலும் ‘கட்டம் போட்ட சட்டை’ என்ற கிராமிய கதையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்’ ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா தொடங்கி இருக்கிறார்.

அமிதாப்பச்சன் நடித்து குரல் கொடுக்கும் இந்த ஆல்பத்தை பால்கி இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions