பெர்சனலை ஒருபோதும் சினிமாவுடன் கலக்க மாட்டேன் : அமிதாப் பச்சன்

Bookmark and Share

பெர்சனலை ஒருபோதும் சினிமாவுடன் கலக்க மாட்டேன் : அமிதாப் பச்சன்

பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக நீண்டகாலமாக விளங்கி வரும் அமிதாப் பச்சன், பிகு படம் குறித்தும், அதன் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.... படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கிறீர்கள்... அதற்கு உங்கள் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது?(சிரித்துக்கொண்டே) எனக்கு இப்போது 73 வயது ஆகிறது.

என்னால் முடிந்த அளவிலான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். என்னால் தற்போதைக்கு, தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது. என்னால் என்ன முடியுமோ, அதற்கான கேரக்டர்களிலேயே நடிப்பதால், எவ்விதமான எதிர்மறை விளைவுகளையும் தான் உணர்வதில்லை....

உங்கள் கேரக்டர்களுடன் நிஜ வாழ்க்கையை தொடர்புபடுத்துவதுண்டா?இல்லை. நான் ஒருபோதும், என்னுடைய நிஜ வாழ்க்கையை, செய்யும் தொழிலுடன் தொடர்புபடுத்துவதில்லை.

உதாரணமாக, பிகு படத்தில், தீபிகா படுகோனே எனது மகள் கேரக்டரில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே, பிகு கேரக்டரில் நடித்துள்ளார். அந்த இடத்தில், தீபிகா படுகோனேவை, நான் மகளாக பார்க்கவில்லை, பிகுவாகவே பார்த்தேன். அதேபோல, தீபிகா என்னை, அப்பா கேரக்டரிலேயே பார்த்தார்.

உண்மை மனிதர்களை கேரக்டர்கள் பிரதிபலிக்கின்றனவா? இதில் உங்களது கருத்து என்ன?என்னைப் பொறுத்தவரை, படப்பிடிப்பில் இருக்கும் வரையே, நான் அந்த கேரக்டராக இருப்பேன், சூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வந்து விட்டால், நான் சாதாரண அமிதாப் பச்சன் தான்.

வீட்டில் இருக்கும்போது, என் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாவலன் அவ்வளவே. மற்றபடி, ஒருபோதும், எவரின் குணாதிசயங்களையும் நான் பிரதிபலிப்பதில்லை.... இர்பான் மற்றும் தீபிகாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து.. இர்பான் கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன் பிகு படத்தில் இணைந்து பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

நான் தீபிகாவுடன் ஏற்கனவே ஆரக்ஷான் படத்தில் இணைந்து நடித்துள்ளேன். தீபிகா சிறந்த நடிகை. இர்பான் கானுடன் முதன்முதலாக இணைந்துள்ளேன். இர்பான் சிறந்த மனிதர்.

உங்கள் உடல்நிலை குறித்து வந்த செய்தி உண்மையானதா?(சிரித்துக்கொண்டே) நானும் அதுமாதிரி வெளியான வதந்திகளை படித்தேன். அதில் துளியளவும் உண்மையில்லை.

நான் பூரண உடல்நலத்துடன் இருக்கிறேன். லீலாவதி மருத்துவமனைக்கு, ரெகுலர் ஹெல்த் செக்அப்பிற்காகவே சென்றிருந்தேன். எனக்கு தற்போது 73 வயது ஆகிறது.

6 மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் நான் எப்போதும்போல அதே உற்சாகத்தோடு தான் பங்கேற்றதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions