14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கணவன்-மனைவி

Bookmark and Share

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கணவன்-மனைவி

அமிதாப் பச்சன் இன்றி பால்கி படத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு அவரது படத்தில் அமிதாப்பிற்கு என்ற ஒரு முக்கிய ரோல் கொடுத்துவிடுவார்.

இந்தமுறை தான் இயக்க இருக்கும் படத்தில் அமிதாப்பை மட்டுமல்லாது அவரது மனைவியும், மாஜி ஹீரோயினுமான ஜெயா பச்சனையும் நடிக்க வைக்க போகிறார் பால்கி. பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள் கடைசியாக 2001ம் ஆண்டு கபி குஷி கபி கம் என்ற படத்தில் நடித்தனர்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் பால்கி இவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க இருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பது வெறும் கெஸ்ட் ரோல் தான்.

ஆனால் அந்த கெஸ்ட் ரோலையே அவ்வளவு சிறப்பாக எடுக்க இருக்கிறார் பால்கி. மும்பையில் கடந்த இருதினங்களாக இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி படமாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். 


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions