குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்

Bookmark and Share

குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்

மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது. 

15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பலமுறை பாராளுமன்ற எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

12-10-1919 அன்று பிறந்த விஜய ராஜே சிந்தியா கடந்த 25-01-2001 அன்று டெல்லியில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாக ‘ராஜபாதையில் இருந்து மக்கள் மன்றம் நோக்கி’ ("Rajpath Se Lok PathPar") என்ற தலைப்பில் மிருதுளா சின்ஹா என்பவர் நூலாக எழுதியிருந்தார்.

இந்த நூலை தழுவி "Ek Thi Rani Aisi Bhi", இப்படியும் ஒரு ராணி இருந்தார் என்ற திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா என்பவர் உருவாக்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பிரத்யேகமாக திரையிடப்பட்ட இந்தப் படத்தை வர்த்தக ரீதியாக திரையிட படக்குழுவினர் சமீபத்தில் தீர்மானித்தனர்.

கதாநாயகனாக வினோத் கண்ணாவும், மகாராணி பாத்திரத்தில் கதாநாயகியாக ஹேமா மாலினியும் நடித்துள்ள இந்தப் படத்தின் வர்த்தகரீதியான டிரெய்லர் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

தற்போது கோவா கவர்னராக பொறுப்பு வகிக்கும் மிருதுளா சென்னின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டு இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக இவ்விழாவில் பேசிய நடிகர் அமித்தாப் பச்சன் கூறினார்.


Post your comment

Related News
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது
தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸ் சீனுக்கு இப்படி ஒரு சோதனை நடந்ததா?
எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions