தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸ் சீனுக்கு இப்படி ஒரு சோதனை நடந்ததா?

Bookmark and Share

தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸ் சீனுக்கு இப்படி ஒரு சோதனை நடந்ததா?

தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் மாஸ் என்ற வட்டத்திற்கு வந்த பின்பு தான் ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கும். இதில் எப்போதும் காட்பாதர் என்றால் ரஜினி தான்.

ஒரு சிறிய கை அசைவிலேயே மொத்த திரையரங்கையும் அதிர வைத்து விடுவார், அப்படி தான் 21 வருடங்களுக்கு பிறகு ரீரிலிஸாக வெளிவந்தும் பாட்ஷா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்த பாட்ஷா பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஹம் படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது, அதில் ரஜினியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஹம் படத்தில் அமிதாப் பச்சன் தன் தம்பி கோவிந்தாவிற்கு வேலை வாங்க ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்று சொல்லும்படி ஒரு வசனம் இருந்ததாம்.

என்னங்க இதெல்லாம் ஒரு மாஸ் காட்சியா, படத்திலிருந்து தூக்குங்கள் என அமிதாப் கூறி அந்த காட்சியை நீக்கியுள்ளனர்.

ஆனால், அதையே ரஜினி தன் ஸ்டைலுக்கு ஏற்றார் போல் தமிழில் வைக்க சொல்ல, இன்றும் விசில் பறக்கின்றது அந்த காட்சிக்கு, இப்படித்தான் உருவானும் இந்த மாஸ் காட்சி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions