பலத்த பாதுகாப்புடன் வெளியான அமிதாப்பச்சன் படம்.!

Bookmark and Share

பலத்த பாதுகாப்புடன் வெளியான அமிதாப்பச்சன் படம்.!

அமிதாப்பச்சன், சயீப் அலிகான், தீபிகா படுகோனே ஆகியோர் இணைந்து நடித்த இந்திப்படம் “ஆரக்ஷான்”. இதில் அமிதாப்பச்சன் பேராசிரியர் வேடத்தில் வருகிறார். அரசின் இடஒதுக்கீடு கொள்கையை எதிர்க்கும் காட்சிகளும், வசனங்களும் இப்படத்தில் இடம் பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அவற்றை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
 
இதையடுத்து ஆரக்ஷான் படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது. எனவே உத்தர பிரதேசத்தில் படத்தை வெளியிட அங்குள்ள மாநில அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது. உளவுத்துறை அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 
 
இதுபோல் பஞ்சாப் மாநிலத்திலும் ஆரக்ஷான் படத்தை வெளியிட அரசு தடை விதித்தது. இதற்கான உத்தரவை அங்குள்ள சிரோன் மணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி அரசு நேற்று பிறப்பித்தது. படத்தை பார்த்து அறிக்கை அளிக்க 7 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. அதுவரை தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இன்று ஆந்திரபிரதேசத்திலும் ஆரக்ஷான் படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. 
 
இந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் ஆரக்ஷான் படம் இன்று ரிலீசானது. தமிழ்நாட்டிலும் இப்படம் வெளியாகி உள்ளது. சென்னையில் ஆரக்ஷான் படம் இன்று ரிலீசானது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர்., மெலோடி, ஏ.ஜி.எஸ்., பேம் நேஷனல், மாயாஜால் ஆகிய தியேட்டர்களில் திரை யிடப்பட்டது. 
 
இப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், சயீப் அலிகான் உயிருக்கு எதிர்ப்பாளர்களால் ஆபத்து ஏற்படலாம் என கருதி அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள அமிதாப்பச்சன் இல்லத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
 
மும்பையில் உள்ள தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள ஆரக்ஷான் பட பேனர்களை குடியரசு கட்சியினர் கிழித்து எறிந்தனர். சர்ச்சைக்குரிய வசனங்கள் குறித்து தணிக்கை குழுவுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்து உள்ளது. அந்த காட்சிகளையும், வசனங்களையும் நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ஜா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions