நூடுல்ஸ் சர்ச்சையால் கலக்கம்: விளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் மறுப்பு

Bookmark and Share

நூடுல்ஸ் சர்ச்சையால் கலக்கம்: விளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் மறுப்பு

மேகி நூடுல்ஸ் சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் மேகி நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது.

இதன் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரிதீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரும் சிக்கலில் மாட்டி உள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதனால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர். இரு வருடங்களுக்கு முன்பே நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றும் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார்.மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகிறார்கள்.

மதுரை நுகர்வோர் கோர்ட்டிலும் மேகி நூடுல்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமிதாப்பச்சன், மாதுரிதீட்சித், ப்ரீத்தி சிந்தா ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த மூவருக்கும் கடும் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் மற்ற விளம்பர படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கலத்தில் உள்ளனர். இந்தி நடிகர் நடிகைகள் சில நிமிட விளம்பர படங்களில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான் அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யாபாலன், கரீனாகபூர், கத்தினாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

தமிழில் விஷால், சூர்யா, ஆர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், சினேகா, பிரபு உள்ளிட்ட பலர் விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். மேகி நூடுல்ஸ் சர்ச்சையால் நடிகர் நடிகைகள் புதிய விளம்பர படங்களில் நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடித்து வரும் விளம்பர படங்களுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கும் குளிர்பான விளம்பர மொன்றில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார்.

 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions