வரி ஏய்ப்பு விவகாரம்: மவுனம் கலைத்தார் அமிதாப் பச்சன்

Bookmark and Share

வரி ஏய்ப்பு விவகாரம்: மவுனம் கலைத்தார் அமிதாப் பச்சன்

பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும்,

வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இந்தியாவில் இருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர்,

கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உள்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். 

இதில் அமிதாப்பச்சன் 1993–ம் ஆண்டு 4 நிறுவனங்களின் இயக்குனராக நியமிக்கப்பட்டதாகவும் இதேபோல் 2005–ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமிக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பதிவு செய்யப்பட்டதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. 

பனாமா உள்ளிட்ட சில நாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார். இந்த விவாகரம் தொடர்பாக அமிதாப் பச்சன் மவுனம் காத்து வந்தார். ஆனால் இன்று தனது மவுனத்தை கலைத்து ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

“ஊடகத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நிறுவனத்தையும் எனக்குத் தெரியாது. சீ பல்க் ஷிப்பிங் நிறுவனம், லேடி ஷிப்பிங் லிட், ட்ரெஷர் ஷிப்பிங் லிட், மற்றும் டிராம்ப் ஷிப்பிங் லிட்., ஆகிய நிறுவனங்கள் எதிலும் இயக்குனராக நான் இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

நான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன். வெளிநாடுகளில் செலவழித்த தொகைக்கும் நான் வரி செலுத்தியே வந்துள்ளேன். வெளிநாட்டுக்கு நான் அனுப்பிய தொகைகளுக்கும் நான் வரியையும் செலுத்தியுள்ளேன். ஊடகத்தில் வெளியான செய்தி அறிக்கையிலும் கூட என் பக்கத்தில் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததாக கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று  அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions