படப்பிடிப்பில் அமிதாப்பச்சனுக்கு காயம்!

Bookmark and Share

படப்பிடிப்பில் அமிதாப்பச்சனுக்கு காயம்!

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தற்போது ‘டிஇ3என்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருடைய விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார். 

இந்தநிலையில், தன்னுடைய உடல்நலம் குறித்து டுவிட்டரில் அவர் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், ‘‘படப்பிடிப்பின்போது என்னுடைய விலா எலும்பில் அடிபட்டது. உடனடியாக நண்பர்கள் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

சுவாசிக்கும்போது வலி ஏற்படுத்துகிறது. அது என்னை காயப்படுத்துகிறது. இருப்பினும், என்னுடைய உடல்நிலை பற்றி கவலைப்பட வேண்டாம். 
வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்.

வலியில் இருந்து குணம் அடைய இன்னும் 48 மணிநேரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்’’ என்று அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பச்சன் நடிப்பில் தயாரான ‘வசீர்’ படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions