மேகிநூடுல்ஸ் வழக்கில் விடுவிக்க மனு தாக்கல்; அமிதாப்

Bookmark and Share

மேகிநூடுல்ஸ் வழக்கில் விடுவிக்க மனு தாக்கல்; அமிதாப்

மேகி நூடுல்ஸ்  தொடர்பான வழக்கில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர்  விளம்பரத்துக்கு துணையாக இருக்கக்கூடாது எனவும் நுகர்வோர் நல நிதியாக மத்திய அரசுக்கு 45 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மதுரையை சேர்ந்தவர் மணவாளன் நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குனர், உணவு பாதுகாப்பு ஆணையர்  மற்றும் அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப் பட்டன. அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமிதாப் சார்பாக அவருடைய வக்கீல் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியதாவது.. நான் பல படங்களில் நடித்து பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறேன். தற்போது மேகி நூடுல்ஸ் தொடர்பான வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். கடந்த 5.6.2012 முதல் 5.9.2013 வரை மட்டும் தான் மேகி நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நான் நடித்துள்ளேன்.

அந்த நாட்களில் மேகி நூடுல்ஸ் பற்றியும், அதன் தரம் பற்றியும் எந்த பிரச்சினையும் எழவில்லை. எனவே அதற்கு பிறகு நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன்மூலம் அவர் விளம்பரம் தேடும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்.

எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Post your comment

Related News
நடிகர்கள் அமிதாப்- தனுஷை பார்க்க டெல்லி சாலையில் திரண்ட ரசிகர் கூட்டம்: போக்குவரத்து ஸ்தம்பித்தது
இந்த விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - ரஜினி
ஆபாச ஆட்டம் ஆடிய‌ கரினா, பிரியங்கா, அமிதாப்பச்சான் மீது ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு!
பாலிவூட்டில் அமிதாபச்சனுக்கு ஜோடியாக குஸ்பு!
அமிதாப் பச்சன் மணைவியின் சொத்து மதிப்பு !
பிரபு தேவா, சல்மான், ப்ரியங்காவின் அட்டகாச நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!
அமிதாப்பச்சனுடன் தனுஷ் சந்திப்பு: கொலை வெறிடி பாடலுக்கு பாராட்டு
அமிதாப்பச்சனை விட “பாரத ரத்னா” விருதுக்கு தெண்டுல்கர் தகுதியானவர்; பிரபல பாடகி பேட்டி
கலவரத்தை தூண்டினாரா அமிதாப்? சீக்கிய பெண்ணின் "பரபரப்பு" புகார்!
சூப்பர் ஸ்டாருக்கு விலா எலும்பில் காயம்...!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions