தமிழ் சினிமாவில் முதல் 82 வயது ஹீரோயின்

Bookmark and Share

தமிழ் சினிமாவில் முதல் 82 வயது ஹீரோயின்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் அம்மணி படத்தை வெண்கோவிந்தா தயாரிக்கிறார். இப்படம் 82 வயது மூதாட்டிக்கும் 57 வயது முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்ணுக்குமான நட்பை சொல்கிற கதை.

87 வயதாகும் அம்மணி தான் கதையின் நாயகி. கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து தெருக்கோடியில் குப்பை பொறுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர். 57 வயது சுப்புலட்சுமி அரசு வேலையில் இருப்பவர் இருவருக்குமான நட்பும் வாழ்க்கையும் தான் படம்.

இதில் 57 வயது பெண்ணாக நடித்திருப்பது லட்சுமி ராமகிருஷ்ணன். அம்மணியாக நடித்திருப்பது சுப்புலட்சுமி.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சுப்புலட்சுமியும், லட்சுமி ராமகிருஷ்ணனும் மாமியார் மருமகளாக நடித்தார்கள். அப்போதிருந்தே இருவருக்குள்ளும் நட்பு உருவானது. 

அந்த நட்புதான் அம்மணி கதைக்கு கருவாகவும் அமைந்து விட சுப்புலட்சுமியையே அம்மணியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். இன்றைய தேதியில் 87 வயது ஹீரோயின் சுப்புலட்சுமிதான்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions