சும்மா இருக்க சங்க ஊதிய டிங்கு, லாரன்ஸ் மாஸ்டரை இழுக்காதே- அம்ரிஷ் விளாசல்

Bookmark and Share

சும்மா இருக்க சங்க ஊதிய டிங்கு, லாரன்ஸ் மாஸ்டரை இழுக்காதே- அம்ரிஷ் விளாசல்

கோலிவுட்டில் என்றுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் இசையமைப்பாளர் அம்ரிஷ் என்பவர் என் பாடலை திருடி மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு கொடுத்து விட்டார் என டிங்கு யு-டியூபில் புகார் கொடுத்தார்.

ஆனால், அம்ரிஷ் சமீபத்தில் இதற்கு விளக்கம் அளிக்கையில் ‘டிங்கு திருடியதாக சொன்ன பாடலை நான் உண்மையாகவே மொட்ட சிவா கெட்ட சிவாவிற்காக தான் இசையமைத்தேன்.

டிங்குவிடம் டம்மி லிரிக்ஸ் தான் கொடுத்தேன், மேலும், நான் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்காக பணியாற்றிய வீடியோ பதிவு கூட உள்ளது.

அதற்கு என்னிடம் நிறைய ஆதாரம் உள்ளது, டிங்கு சும்மா இருக்கிற சங்கை ஊதுகிறார், மாஸ்டரை பற்றி தவறாக பேசுகிறார்.

’மாஸ்ட்டருக்கு டிங்கு யார் என்றே தெரியாது, அவர் இதை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தார்’ என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions