இசையமைப்பாளர் அம்ரிசுக்கு விரைவில் திருமணம்

Bookmark and Share

இசையமைப்பாளர் அம்ரிசுக்கு விரைவில் திருமணம்

நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகள் பெயர், கீர்த்தி. ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. சென்னையை சேர்ந்த சுதர்சன்-விஜயஸ்ரீ தம்பதிகளின் மகள். ஜெயசித்ராவுக்கு நெருங்கிய உறவுப்பெண்.

அம்ரிஷ்-கீர்த்தி திருமணம், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில், 19-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6-30 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அம்ரிஷ், ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிகளின் ஒரே மகன். ஜெயசித்ரா டைரக்டு செய்த ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதுடன், அந்த படத்துக்கு இசையும் அமைத்தார்.

தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா,’ பரத் நடிக்கும் ‘பொட்டு,’ மற்றும் ‘சத்ரு’ உள்பட 10 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions