திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்

Bookmark and Share

திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

திருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம். எனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions