உஷார் பார்ட்டியான எமி ஜாக்சன்!

Bookmark and Share

உஷார் பார்ட்டியான எமி ஜாக்சன்!

ஐ படத்தில் விக்ரமுடன் நடித்தவர் எமி ஜாக்சன். அந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் அந்த படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு எமியை இரண்டாவது நாயகியாக்க அப்பட டைரக்டர் வெங்கட்பிரபு திட்டமிட்டதை அறிந்த அவர் கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்தே வெளியேறினார்.

அதன்பிறகு உதயநிதி நடிக்கும் கெத்து படத்தில் கமிட்டானார். அதோடு தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமானார்.

ஆனால் அந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் கமிட்டாகியிருந்ததால் ஆரம்பத்திலேயே உஷாராகி விட்டார் எமி. அதனால் அந்த படத்தில் சைன் பண்ணுவதற்கு முன்பே கதையை துருவி துருவி கேட்டார்.

அப்போது தனது கேரக்டர் திருப்தியாக இருந்ததால் ஓகே சொன்னார். அதோடு அப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், மேலும் சில டைரக்டர்களும் இரண்டு கதாநாயகி கதைகளில் நடிக்க எமியை தொடர்பு கொண்டபோது முதலில் மொத்த கதையையும் என்னிடம் சொல்ல வேண்டும்.

அதன்பிறகுதான் நடிப்பதைப் பற்றி முடிவெடுப்பேன் என்று கூறி விட்டாராம். அதனால் அவரது கேரக்டரை டெவலப் பண்ணி சொல்லும் வேலைகளில் அப்பட டைரக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions