2.O ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராகும் எமி ஜாக்சன்!

Bookmark and Share

2.O ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராகும் எமி ஜாக்சன்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

நடிகை எமி ஜாக்சனுக்கு இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருப்பதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இதில் ஒரு சண்டைக்காட்சி தற்போது படமாகி வருவதாகவும் அதற்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் நடிகை எமி ஜாக்சன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த ஷெட்யூல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. அதன்பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர், சென்னையில் சில காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

பின்னர் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் பொலிவியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அங்கு ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions