அதிருப்தியில் எமிஜாக்சன்!

Bookmark and Share

அதிருப்தியில் எமிஜாக்சன்!

ஐ படத்திற்கு பிறகு அதிரடியாக 4 படங்களில் கமிட்டாகி விட்டார் எமி ஜாக்சன். இதில் தனுசுடன் நடித்துள்ள விஐபி-2 படத்திலும், விஜய்யின் 59வது படத்திலும் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார்.

ஆனால் விஐபி-2 படத்தில் சமந்தாவையே முதன்மை நாயகியாக சித்தரித்து பப்ளிசிட்டி முடுக்கி விடப்பட்டிருப்பதால் தன்னை இரண்டாம் பட்ச நாயகியாக்கி விட்டார்களே என்று அதிருப்தி மனநிலையில் இருக்கிறார் எமிஜாக்சன்.

அதோடு, விஜய்யின் 59வது படத்திலும் சமந்தா இருப்பதால், ஏற்கனவே விஜய்யுடன் கத்தியில் நடித்திருக்கும் அவருக்கே முக்கியத்துவம் கொடுத்து விட்டால் அந்த படத்திலும் நாம் இரண்டாவது நாயகியாக்கப்பட்டு விடுவோமே என்று கலவரத்தில் காணப்படுகிறார் எமி.

இந்த நிலையில், உதயநிதியுடன் நடித்து வரும் கெத்து படத்தைதான் தற்போது அவர் பெரிதாக எதிர்பார்க்கிறார் எமி. ஏற்கனவே தனது முந்தைய படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா, நயன்தாராவுக்கு அவர் நல்ல பப்ளிசிட்டி கொடுத்ததால் இந்த கெத்து படத்தின் மூலம் தனக்கும் பெரிய அளவில் பப்ளிசிட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறாராம் எமி ஜாக்சன்.

மேலும், இந்த படங்களைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக சிங்கிள் ஹீரோயினாக நடிக்கயிருப்பது எமிக்கு இன்னொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions