புடவை மீது காதல் கொண்ட எமி ஜாக்சன்

Bookmark and Share

புடவை மீது காதல் கொண்ட எமி ஜாக்சன்

தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு வருகிறதோ இல்லையோ, வெளிநாட்டு நடிகைகளை நடிக்க வரவழைத்து விட்டது. எத்தனை நாளைக்குத்தான் நம் ஊர் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பது, வித்தியாசத்திற்கு அவர்களையும் பார்க்கலாமே என நம் இயக்குனர்கள் நினைத்துவிட்டார்கள்.

அதனால்தான், எமி ஜாக்சன் தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துகொண்டுள்ளார், மேலும் சில படங்களில் நடிக்கவும் உள்ளார். எமி ஜாக்சன் என கூகுள் செய்தால் அதிகமாக பலான பலான புகைப்படங்கள்தான் வந்து விழும்.

ஆங்கிலேய மாடல் ஆன எமி ஜாக்சன் அம்மாதிரியான புகைப்படங்கள் பலவற்றிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த மாத ’மேக்சிம்’ அட்டைப் படத்திலும் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

ஆனாலும், எமி ஜாக்சன் நம் பாரம்பரிய உடையான புடவைக்கு அடிமையாகி விட்டாராம். புடவை அணிவது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாம். புடவை பெண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தருவதாக உள்ளது என பாராட்டவும் செய்திருக்கிறார்.

மாடல் ஆக இருந்தாலும் இதுவரை தான் நடித்த தமிழ்ப் படங்களில் அளவுக்கதிகமான கவர்ச்சி காட்டாமல் கட்டுப்பாடுடன்தான் நடித்திருக்கிறார் எமி. தற்போது தமிழ் கற்கவும் ஆரம்பித்துள்ளாராம்.

சென்னையில் செட்டில் ஆவதற்கும் விருப்பமாக இருக்கிறாராம். அப்படியென்றால்  தமிழ்ப் பையன் யாரையாவது திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டால்,  எதிர்காலத்தைப் பற்றி யாராலும் எதுவும் கணிக்க முடியாது என்கிறார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions