கெத்து காட்டும் எமி ஜாக்சன்!

Bookmark and Share

கெத்து காட்டும் எமி ஜாக்சன்!

ஐ படத்தில் டூ-பீஸ் கெட்டப்பில் தோன்றி இளவட்ட ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர் எமி ஜாக்சன். அதையடுத்து, அவரை சூர்யாவின் மாஸ் படத்துக்கு பேசினர். சூர்யா படம் என்றதும் ஓகே சொல்லியிருந்தார். 

ஆனால் சென்னை வந்து கதை கேட்டவருக்கு பெரிய அதிர்ச்சி. நயன்தாராவின் மேல் மொத்த கதையும் செல்ல இவருக்கு மிகச்சிறிய வேடம். அதனால் இத்தனை துக்கடா வேடத்தில் என்னால் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டார் எமி. பின்னர் அந்த ரோலுக்குதான் சகுனி ப்ரணிதா கமிட்டானார்.

அதையடுத்து தனது கெத்து படத்துக்கு எமியை உடனடியாக ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. இந்த படத்தில் ஒரு துடுக்குத்தனமான கெத்தான பெண்ணாக நடிக்கும் எமி ஜாக்சனை, இதுவரை எந்த படத்தில் காட்டாத அளவுக்கு பக்கா தமிழ்ச்சியாக உருமாற்றியிருக்கிறார்கள்.

அதோடு இதற்கு முன்பு உதயநிதியின் படங்களில் ஹன்சிகா, நயன்தாரா ஆகியோர் நடித்தது போன்ற கதாபாத்திரம் என்பதால், படத்தில் எமிக்கு பர்பாமென்ஸ் ஸ்கோர் பண்ணக்கூடிய நிறைய காட்சிகளும் உள்ளதாம்.

அதனால், இதுவரை எமி ஜாக்சனை லண்டன் நடிகை என்ற கோணத்திலேயே பார்த்து வந்த கோடம்பாக்கத்தினர் இனிமேல் இவரும் நம்முடைய மண் வாசணை நடிகை தான் என்று ஏற்றுக்கொள்வார்களாம். அந்த அளவுக்கு தமிழ் மணம் கமழும் நடிகையாக இப்படத்தில் கெத்து காட்டி வருகிறாராம் எமி ஜாக்சன்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions