எமி ஜாக்சனின் கனவு நனவாகுமா?

Bookmark and Share

எமி ஜாக்சனின் கனவு நனவாகுமா?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து மதராசப்பட்டணம் படத்தை இயக்கியபோது, வெள்ளைக்காரப்பெண் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால் எமிஜாக்சனை கதாநாயகியக்கினார் இயக்குநர் விஜய்.

லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் மதராசப்பட்டணம் படத்தில் ஏற்று நடித்த வெள்ளைக்கார கவர்னரின் மகள் வேடத்துக்குப் பொருத்தமாக இருந்தார். அதைத் தொடர்ந்து தாண்டவம் படத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் அவருக்கு வேடப்பொருத்தம் சிறப்பாகவே இருந்தது.

அடுத்து நடித்த ஐ படத்திலோ மாடல் அழகியாக நடித்தார். அந்த வேடமும் எமிக்குப் பொருத்தமாக இருந்தது. ஐ படத்தில் நடித்த பிறகு எமி ஜாக்சன் இந்திய அளவில் பாப்புலராகிவிட்டார்.

பிரபுதேவா இயக்கும் சிங் இஸ் பிலிங் என்ற ஹிந்திப்படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் எமிஜாக்சன். ஏற்கனவே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கான, ஏக் தீவானா தா என்ற படத்தில் நடித்திருக்கிறார் எமி.

2012 ல் வெளியான அந்தப்படம் படு தோல்வியடைந்தது. எனவே இன்னொரு கேத்ரினா கைஃப் ஆகிவிடலாம் என்ற எமியின் கனவு கலைந்து போனது. தற்போது சிங் இஸ் பிலிங் படத்தில் நடிப்பதன் மூலம் எமியின் கனவு நனவாகுமா பார்ப்போம்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions