எமி ஜாக்சனுக்கு வசனம் சொல்லிக்கொடுக்க கஷ்டப்பட்டேன் -கெத்து இயக்குனர்

Bookmark and Share

எமி ஜாக்சனுக்கு வசனம் சொல்லிக்கொடுக்க கஷ்டப்பட்டேன் -கெத்து இயக்குனர்

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கெத்து’. எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இதில் இயக்குனர் திருகுமரன் பேசும்போது, ‘நான் இயக்கிய மான் கராத்தே படத்தில் உதயநிதிதான் நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

அடுத்ததாக ‘கெத்து’ படத்தின் கதையை உருவாக்கிய பின்பு உதயநிதிதான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நடிக்க வைத்துள்ளேன். ஒரு சண்டைக்காட்சியில் உதயநிதி ஒரே டேக்கில் நடித்து முடித்தார்.

உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். முதலில் எமி ஜாக்சனுக்கு தமிழில் வசனம் சொல்ல கஷ்டப்பட்டேன். பின்னர் நாளடைவில் தமிழில் சொன்னால் கூட புரிந்துக் கொண்டார்’ என்றார்.

 


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions