டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!

Bookmark and Share

டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!

அடிக்கிற வெயிலில் அந்து அவலாகிக் கொண்டிருக்கிறார்கள் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களும் அவர்களுக்காக வாக்கு சேகரிக்கும் ஆதரவாளர்களும். யார் ஜெயிப்பார்கள் என்பது கிட்டத்தட்ட தெரிந்த சங்கதிதான் என்றாலும், எப்படியாவது தங்களுக்கு கூடுதல் வாக்குகள் பெற கட்சிகளின் வேட்பாளர்கள் தம் கட்டுகிறார்கள்.

ஆர்கே நகரில் செல்வாக்கு மிக்க வேட்பாளர் இருக்கிறார்களோ இல்லையோ... ஆனால் பசையான வேட்பாளர் என்றால் அது டிடிவி தினகரன்தான். அவருக்கு இந்தத் தேர்தலில் வெல்வது மானப் பிரச்சினை மற்றுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிற விஷயம். அதனால் சகல அஸ்திரங்களையும் ஏவிக் கொண்டிருக்கிறார் தினகரன்.

அதில் ஒன்றுதான் பிரச்சாரத்துக்காக ரஜினி பட ஹீரோயினான எமி ஜாக்ஸனை களமிறக்குவது. எமி ஜாக்ஸனுக்கும் இந்த பிரச்சார சமாச்சாரம் ரொம்பப் பிடித்துவிட்டதாம். கேட்ட தொகையையும் தர தினகரன் தரப்பு ஒப்புக் கொண்டதால், விரைவில் ஆர் கே நகர் வீதிகளில் வலம் வரப் போகிறார் எமி.

இது இயக்குநர் ஷங்கருக்கு பெரும் குடைச்சலாக உள்ளதாம். ஏற்கெனவே படத்துக்கு எதிராக யார் எப்போது கிளம்புவார்கள் என்று தெரியாத நிலையில், தெரிந்தே வேலியில் போகிற ஓணானை பிடித்து கவுனுக்குள் விட்டுக் கொள்ள வேண்டுமா? என்று என்னதான் புத்திமதி சொல்லியும், எமி கேட்கணுமே... ம்ஹூம்!


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions