என்னாது ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்காக நடிகை எமி ஜாக்சன் தொப்பியுடன் பிரசாரமா?

Bookmark and Share

என்னாது ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்காக நடிகை எமி ஜாக்சன் தொப்பியுடன் பிரசாரமா?

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு பிரச்சாரம் காலை மாலை என தூள் பறந்து வருகிறது. திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி, சிபிஎம், பாஜக ஆகிய கட்சிகள் ஆர்.கே. நகரின் தேர்தல் களத்தில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக இரண்டாக பிளந்து அதிமுக அம்மா கட்சியாகவும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியாகவும் களத்தில் போட்டியிடுவதால் தங்களது பலத்தை காட்ட அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஆர்.கே. நகரில் தொப்பியோடு ஆஜராகிவிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,

 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது மானப்பிரச்சனை என்று கருதுவதால் தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரத்தை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால், மதராசபட்டணம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, 'ஐ' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சனை பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தொப்பி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாகவும் சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.




இதற்காக மதரசாப் பட்டிணம் திரைப்படத்தில் தொப்பி அணிந்து கலக்கலாக நடித்த தோன்றிய எமி ஜாக்சனை சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions