இந்த வாரம் சமந்தா, எமிஜாக்சன் வாரம்

Bookmark and Share

இந்த வாரம் சமந்தா, எமிஜாக்சன் வாரம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தாவுக்கு வரும் வாரம் மறக்க முடியாத வாரமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த ஒரே வாரத்தில் சமந்தா நடித்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக் மற்றும் ஒரு படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

நவம்பர் 24ஆம் தேதி சூர்யாவுடன் சமந்தா நடித்த '24' படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் நவம்பர் 26ஆம் தேதி இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியாகவுள்ளது. மேலும் தனுஷுடன் சமந்தா நடித்த 'தங்க மகன்' படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அடுத்தடுத்து ஒரு சில நாட்கள் இடைவெளியில் சமந்தா படங்களின் பர்ஸ்ட்லுக் மற்றும் பாடல் வெளியீடு நடைபெறவுள்ளதால் சமந்தாவின் ரசிகர்கள் அதிகபட்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதே நேரத்தில் இந்த வாரம் சமந்தாவுக்கு மட்டுமின்றி பிரபல நடிகை எமிஜாக்சனுக்கும் சிறந்த வாரமாக அமைந்துள்ளது. விஜய் 59' மற்றும் தங்கமகன்' ஆகிய இரண்டு படங்களில் சமந்தா மட்டுமின்றி எமிஜாக்சனும் நடித்துள்ளதாலும், மேலும் நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுடன் எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளதாலும் எமிஜாக்சன் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் எமிஜாக்சன் அடுத்து ரஜினியின் 'எந்திரன் 2' படத்திலும் விரைவில் நடிக்கவுள்ளதால் நம்பர் ஒன் இடத்தை நோக்கி முன்னேறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions