இந்தி நடிகருடன் நெருக்கம் காட்டும் எமி!

Bookmark and Share

இந்தி நடிகருடன் நெருக்கம் காட்டும் எமி!

லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற எமிஜாக்சன், மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இந்தி பட உலகிலும் கால் பதித்தார்.

அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு படம் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படம், தனுஷின் தங்க மகன் ஆகிய தமிழ் படங்களிலும் இந்தியில் அறிமுக நடிகர் சூரஜ்பாஞ்சோலியுடனும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எமிஜாக்சனுக்கு, சூரஜ்பாஞ்சோலி மிகவும் பிடித்து விட்டதால் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறாராம். சமீபத்தில் அக்ஷய் குமாருடன் தான் நடித்த படத்தை பார்ப்பதற்காக சூரஜ் பஞ்சோலியை தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளார். மேலும் சூரஜ் வீட்டின் அருகிலேயே எமிஜாக்சன் வீடு பார்த்து குடிபெயர்ந்துள்ளாராம். இரண்டு பேரும் அடிக்கடி ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் எமிஜாக்சன், சூரஜ் பஞ்சோலியை தீவிரமாக காதலிப்பதாக மும்பை பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே எமிஜாக்சன் இந்தி நடிகர் பிரதீக் ஜெயினை விரும்பினார்.

ஒருவர் பெயரை மற்றோருவர் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர் காதல் முறிந்து எமிஜாக்சன் லண்டன் சென்று விட்டார்.

இந்தி நடிகை ஜியாகன் மர்மச் சாவு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் பஞ்சோலி கைதாகி ஜாமீனில் வந்தவர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions