விஜய் படத்தில் எமி ஜாக்சன்?

Bookmark and Share

விஜய் படத்தில் எமி ஜாக்சன்?

விஜய் தற்போது தனது 58-வது படமான ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்பு தேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். பேண்டசி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை விஜய் பிறந்தநாளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பின்னர், விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா அல்லது தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியானது.

அதுவும் வதந்தியாக கருதப்படுகிறது. தற்போது, ஸ்ரதா கபூர் அல்லது எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரதா கபூர் ‘ஆஷிகு 2’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் உதயநிதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions