மலையாள டீச்சரான எமி ஜாக்சன்

Bookmark and Share

மலையாள டீச்சரான எமி ஜாக்சன்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் வருகிற நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் விஜய், எம்.ஜி.ஆர். ரசிகராக நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இது வெறும் வதந்திதான் என்று தற்போது படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. 

மேலும், இப்படத்தில் சமந்தா, விஜய்யின் மனைவியாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது, எமி ஜாக்சன் இப்படத்தில் மலையாள டீச்சராக வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் வெளியாகும் டீசரில் இந்த செய்திகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும் என நம்பலாம். 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions